"Marching to Zion" - trailer in Tamil

Video

April 22, 2015

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், கர்த்தர் மெசபடோமியாவில் ஆபிராமுக்குத் தரிசனமாகி, “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்”. என்றார். ஆபிராம், கர்த்தருக்குக் கீழ்படிந்து, தன் மகன் ஈசாக்கோடும் தன் பேரன் “இஸ்ரேல்” என்று, பின்னர் அழைக்கப்பட்ட யாக்கோபுடனும் வாழ்ந்துவந்த, வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்துக்கு வந்தான்.

இஸ்ரேலும், அவனுடைய 12 மகன்களும், கானான் தேசத்தில் ஒரு பஞ்சம் வந்ததால், எகிப்துக்குப் போனார்கள். அங்கே அவர்கள் ஒரு பலத்த ஜாதியாகப் பலுகிப்பெருகினார்கள். தங்கள் நடுவில் வாழ்ந்த இஸ்ரவேலர் பலத்த ஜாதி ஆனதால் எகிப்தியர் அவர்களுக்குப் பயந்து, அவர்களை அடிமைப்படுத்தி, கடினமான வேலைப்பளுவால் அவர்கள் வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள். எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்தபின்பு, மோசேயால் அடிமைதனத்திலிருந்து மீட்கப்பட்டு, அவர்கள் செங்கடலைக் கடந்து, அரேபியாவுக்குப் போய், அங்கே சீனாய் மலையில் கர்த்தருடைய கட்டளைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

மோசேயுடன் எகிப்தை விட்டு வந்த இஸ்ரவேல் சந்ததியினர் தங்கள் விசுவாசக்குறைவால் வாக்களிக்கப்பட்ட தேசத்துக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. கர்த்தரை விசுவாசிக்கும் ஒரு புதிய தலைமுறை எழும்பும் வரை அவர்கள் வனாந்தரத்தில் வலுக்கட்டாயமாக அலையப்பண்ணப்பட்டு, அதன்பிறகு யோசுவாவோடு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தார்கள்.

ஏறத்தாழ 400 வருடங்களாக, இஸ்ரவேல் 12 கோத்திரத்தார் மோசேயின் பிரமாணங்களின்படி நியாயாதிபதிகளால் ஆளப்பட்டார்கள். மற்ற தேசங்களிலுள்ளவர்களைப்போல், தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென்று விரும்பியதால், தேவன் சவுலை அவர்கள் ராஜாவாக நியமித்தார். அவன் 40 ஆண்டுகள் அவர்களை ஆண்டான். அதைத் தொடர்ந்து தாவீதும் 40 ஆண்டுகள் ஆண்டான். அதைத் தொடர்ந்து தாவீதின மகன சாலமோன் 40 ஆண்டுகள் ஆண்டான். சாலமோன் அரசாண்டபோது, இஸ்ரவேல் ராஜியம், மிகவும் மகிமைக்குரியதாயிருந்தது. அப்போது முதல் ஆலயம் கட்டப்பட்டது. ஆனால் சாலமோனின் இதயம், முதிர்வயதில் கர்த்தரை விட்டுப் பின்வாங்கியதால் கர்த்தர் அவனுடைய மகன், இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்களை ஆளமாட்டான் என்றார்.

சாலமோன் இறந்தபிறகு, இஸ்ரவேல் ராஜியம் பிரிக்கபட்டு, வடதிசை பத்துக் கோத்திரத்தார் தாவீது, சாலமோன் சந்ததியினர் அல்லாத பொல்லாத ராஜாக்களால் வரிசையாக ஆளப்பட்டது. வடதிசை ராஜியபாரம் இஸ்ரவேல் என்றாகி, நாளடைவில் சமாரியா அதன் தலைநகராயிற்று. சிறிய தென்திசை ராஜியம் யூதா என்றழைக்கப்பட்டு எருசலேம் அதன் தலைநகர் ஆகி, தாவீதின் வம்சத்தாரால் ஆளப்பட்டது. 2ம் ராஜாக்கள் 16ம் அதிகாரத்தில் துவங்கி, தென்திசை மக்கள் யூதர்கள் என்றழைக்கப்பட்டு, அதன்பெயர் யூதேயா ராஜியம் ஆயிற்று என்பதை அறிகிறோம்.

இஸ்ரவேலின் வடதிசை ராஜாக்களின் பொல்லாத செய்கையினால் அவர்கள் தள்ளப்பட்டு, அசீரியர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள இஸ்ரவேலர், புறஜாதிகளோடு கலந்து, உள்ளே வந்து தேசத்தைப் பிடித்துக் கொண்டனர். வடதிசையிலுள்ள மக்கள் சமாரியா என்றழைக்கப்பட்டு, இஸ்ரவேலின் வடதிசையிலுள்ள பத்துக்கோத்திரத்தார் ஒரு தேசமாக ஆகவே முடியவில்லை.

தென்திசை யூதேயா தேசத்தவர், அந்நிய தேவர்களைச் சேவித்ததால், தண்டையாக பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டு, ஆலயமும் இடிக்கப்பட்டது, ஆனால் 70 ஆண்டுகளுக்குப்பின்னர் யூதர்கள் யூதாவுக்குத் திரும்பி, எருசலேமில் ஆலயத்தைத் திரும்பக்கட்டி தாவீதின் வம்சத்து அரசர்களால் தொடர்ச்சியாக ஆளப்பட்டார்கள்.

கிறிஸ்துவின் காலத்தில் யூத தேசம் யூதேயா என்றழைக்கப்பட்டு ரோம் அரசின் கீழ் வந்தது. இயேசு கிறிஸ்துவும் அவரது சீஷர்களும், இஸ்ரவேல் வீட்டின் தொலைந்துபோன ஆட்டைத் தேடி, யூதேயா தேசமெங்கும் நற்செய்தி அளித்தனர். மூன்றரை வருட ஊழியத்துக்குப் பின்னர், யூதர்கள் அவரை இயேசுவை அவர்கள் மெசியா என்று ஏற்றுக்கொள்ளாது, ரோம் ஆளுநரை அவரை சிலுவையிலறைய வற்புறுத்தினர், மூன்று நாட்களுக்குப் பின், இயேசு தன் பிதாவின் வலது பாரிசத்துக்குப் பரத்துக்கு ஏறிச் செல்லும் முன் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தன் சீஷர்களுக்கு உயிருள்ளவராய் தன்னை வெளிப்படுத்தினார். இயேசு சிலுவையிலறையப்படும் முன்பு தீர்க்கதரிசனமாக தன்னை ஏற்றுக்கொள்ளாதர்வகளுக்கு, தண்டனையாக எருசலேம் சுட்டெரிக்கப்படும் ஆலயம் இடிக்கப்படும் யூதர்கள் உலகமெங்கும் அடிமையாக சிதறுண்டு போவார்கள் என்று கூறினார். கி.பி.70 ஆம் ஆண்டு இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. ரோமப்பேரசனான தீத்துராயன் எருசலேமை வென்றான். 1800 வருடங்கள் வரை யூதர்கள் எல்லா நாடுகளிலும் சிதறி வாழ்ந்தனர்.

1948ல் நடக்க இயலாத ஒன்று நடந்தது. எருசலேம் மாநிலமாக ஸ்தாபிக்கப்பட்டு, யூதர்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றுக்கொண்டனர். நிறைய கிறிஸ்தவர்கள் இதை அற்புதம் என்றும் கர்த்தரிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறினர். ஆனால் அது உண்மையான கர்த்தரின் ஆசிர்வாதமா அல்லது இருளின் சக்திகளின் செயல்பாடா? இந்தப்படத்தில் விடை இருக்கிறது.

 

 

 

mouseover